×

அதிமுக கூட்டத்தில் ரகளை – நாற்காலி உடைப்பு: அமைச்சர் தப்பினார்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது. அப்போது மண்டபத்திற்குள் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைமை என்ற மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த
 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ரெங்கபவனம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் வளர்மதி, பாசறை மாநில செயலாளர் பரமசிவம் எம்.எல்.ஏ உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்கியது.

அப்போது மண்டபத்திற்குள் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைமை என்ற மஞ்சள் நிற கொடியுடன் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திடீரென மேடையை நோக்கி சரியான நபர்களுக்கு பதவி வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்ததோடு திடீரென அங்கிருந்த சேர்களை எடுத்து அடிக்க ஆரம்பித்தினர்.

இதனால் கூட்டத்தினர் சிதறி ஓட்டம் பிடித்தனர். அமைச்சரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர். அடிதடியில் ஈடுபட்டவர்கள் மேடையை நோக்கி கூச்சலிட்டபடி நாற்காலியில் அடித்து உடைத்தனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பரஞ்சோதியின் சகோதரர் அன்பரசு மீது தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு பெண் நிர்வாகி மீது தாக்கியதால் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் தகறாறு செய்தவர்கள் தப்பியோடினர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகிகள், ’’அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் பதவியை மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்காத ஆத்திரத்தில் அவரது உறவினர் ஒருவர் மற்றும் ஆதரவாளர்கள் தான் தகறாறு செய்தனர். மேலும் முத்தரையர் சங்கத்தினர் பயன்படுத்தும் மஞ்சள் நிறக்கொடியுடன் வந்ததால் அவர்களை யாரும் தடுக்கவில்லை’’ என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.