×

பிக்பாஸ் நடிகை ஓவியா திறந்து வைத்த நகைக்கடையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

திருச்சி திருச்சியில் கடன்தொல்லை காரணமாக தாராபுரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரிய கடைவீதியில் வசிப்பவர் பலராமன். இவர் தாராபுரம் பகுதியில் நகைக்கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரி(38) என்ற மகனும் உள்ளனர். ஹரிக்கு, திவ்யா என்ற மனைவிவும 8 வயதில் அசோக்ராதா என்ற மகளும்
 

திருச்சி

திருச்சியில் கடன்தொல்லை காரணமாக தாராபுரத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரிய கடைவீதியில் வசிப்பவர் பலராமன். இவர் தாராபுரம் பகுதியில் நகைக்கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகிறார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரி(38) என்ற மகனும் உள்ளனர். ஹரிக்கு, திவ்யா என்ற மனைவிவும 8 வயதில் அசோக்ராதா என்ற மகளும் உள்ளனர்.

நகை கடையினை ஹரி நிர்வாகித்து வந்துள்ளார். இந்த கடையை ஓராண்டுக்கு முன்பு நடிகை ஓவியா திறந்துவைத்துள்ளார். இந்த நிலையில், தொழிலில் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை ஈடுகட்ட ஹரி நண்பர்களிடம் சுமார் 15 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில் பணத்தை திருப்பித்தரக் கோரி, கடன் அளித்த 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் பலராமன் குடும்பத்தினர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மருமகள் திவ்யாவின் வீட்டிற்கு சென்ற பலராமன், குடும்பத்தினர், பின்னர் தாராபுரம் செல்வதாக கூறி மணச்சநல்லூர் அருகேயுள்ள துடையூரில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பலராமன், அவரது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகிய 5 பேரும் சைனைடு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். விஷம் அருந்திய விவரத்தினை பக்கத்து அறையில் இருந்த தனது ஓட்டுநருக்கு பலராமன் போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, கார் ஓட்டுநர் மற்றும் விடுதி ஊழியர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலராமன் மற்றும் புஷ்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.