×

திருச்சி: முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகர் தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த சப்பானி என்பவரது மகன் விஜயன்(20). பெயிண்டர் வேலை செய்து வரும் விஜயன் மீது, தில்லைநகர் மற்றும் கோட்டை காவல்நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு கஞ்சா போதையிலிருந்த விஜயன், அதேபகுதியை சேர்ந்த கிங்காங் குணா என்பவரை, இந்த பகுதியில் தானே பெரிய ஆள் என கூறி அடித்துள்ளார்.
 

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகர் தென்னூர் வாமடம் பகுதியை சேர்ந்த சப்பானி என்பவரது மகன் விஜயன்(20). பெயிண்டர் வேலை செய்து வரும் விஜயன் மீது, தில்லைநகர் மற்றும் கோட்டை காவல்நிலையங்களில் வழிப்பறி, அடிதடி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு கஞ்சா போதையிலிருந்த விஜயன், அதேபகுதியை சேர்ந்த கிங்காங் குணா என்பவரை, இந்த பகுதியில் தானே பெரிய ஆள் என கூறி அடித்துள்ளார். இதனையடுத்து, நேற்று நள்ளிரவு குணா, தனது நண்பர்களுடன் சென்று விஜயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது போலீசார் வருவதை கண்டு, அனைவரும் தப்பியோடிய நிலையில், இதுகுறித்து தில்லைநகர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் விஜயனின் வீட்டிற்கு சென்ற 7 பேர் கும்பல், அவரிடம் பிரச்சினை குறித்து பேசு வேண்டும் என கூறி வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்த நியாய விலைக்கடை அருகே சென்றபோது அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஜயனை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

இதுகுறித்து தகவலின் பேரில் விஜயனின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வந்தனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜீவாநகரை சேர்ந்த ஜெயசந்திரன், கார்த்திக், வாமடம் பகுதியை சேர்ந்த கிங்காங் குணா, மாடு பிரசாத் மற்றும் கல்யாணசுந்தரம் பகுதியை சேர்ந்த உதயகுமார், பிரவின் ஆகியோர் விஜயனுடன் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, உதயகுமார், மாடு பிராசாத் ஆகியோரை கைதுசெய்த போலீசார், மேலும் தலைமறைவாக உள்ள ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.