×

இப்போது அறவழி போராட்டம்; அடுத்து…? எச்சரிக்கும் எஸ்.ஆர்.எம்.யு.

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே கோட்டமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் – ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதற்கு பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் சம்மேளத்தினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனிடையே மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய பொதுத்துறை நிர்வாகமான ரெயில்வே நிர்வாகத்தினையும், ரெயில் வழித்தடங்களையும் 150ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் கொள்கை
 

ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே கோட்டமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் – ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதற்கு பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் சம்மேளத்தினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதனிடையே மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மிகப்பெரிய பொதுத்துறை நிர்வாகமான ரெயில்வே நிர்வாகத்தினையும், ரெயில் வழித்தடங்களையும் 150ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் கொள்கை முடிவினைக் கண்டித்து எஸ்ஆர்எம்யு சங்கம் சார்பில் இன்று திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ரயில் பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர் குடியிருப்புகளில் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று தனியார்மயத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரனிடம் நாம் பேசியபோது, மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகமும் 109 ரயில்நிலையங்களையு ம், 150 ரயில்களையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டனர். மல்டி ஸ்கில்லிங் என்ற பெயரில் பல ஆயிரம் தொழிலாளர்களின் பணியைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இரண்டரை லட்சம் காலிப்பணியிடங்களை சரண்டர் சப்ளை செய்து தனியார்மயத்திற்கு விற்றுவிடும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆகவே, அறவழிப் போராட்டத்தினைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.