×

’யாரையும் புலன்விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை!’-தற்கொலைக்கு முன்பு திருச்சி காவலர் எழுதிய கடிதம்

’’என்னுடையை தற்கொலை முடிவுக்கு நானும், எனக்குள் ஏற்பட்ட காரணம் தெரியாத மன அழுத்தங்களே காரணம். அதனால், நான் இறந்த பிறகு, என்னுடன் பணிபுரிந்தகளையோ, பணிபுரிகின்றவர்களையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ புலன்விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை’’என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் திருச்சி மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்த காவலர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அழகர்சாமி (வயது 33). திருமணமாகாத இவர்திருச்சி மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று
 

’’என்னுடையை தற்கொலை முடிவுக்கு நானும், எனக்குள் ஏற்பட்ட காரணம் தெரியாத மன அழுத்தங்களே காரணம். அதனால், நான் இறந்த பிறகு, என்னுடன் பணிபுரிந்தகளையோ, பணிபுரிகின்றவர்களையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ புலன்விசாரணைக்கு உட்படுத்த தேவையில்லை’’என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் திருச்சி மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்த காவலர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அழகர்சாமி (வயது 33). திருமணமாகாத இவர்
திருச்சி மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கே.கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கே.கே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அழகர்சாமி தன் கைப்பட கடிதம் ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் மன அழுத்தம் காரணமாகவே தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், இச்சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.