×

நாட்டறம்பள்ளியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கணவர் மீது உறவினர்கள் தாக்குதல்…

திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சந்தியா(24). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளியை சேர்ந்த யோகநாதன் (27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்பட 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கணவர் யோகநாதன்
 

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சந்தியா(24). இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டறம்பள்ளியை சேர்ந்த யோகநாதன் (27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்பட 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கணவர் யோகநாதன் அளித்த தகவலின் பேரில், நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சந்தியாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி, மருத்துவமனை முன்பு உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவமனைக்கு வந்த யோகநாதன் மற்றும் அவரது தந்தை அசோகனை சராமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு வாகனம் மூலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டம் காரணமாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.