×

வாணியம்பாடி: பைக் மோதி உயிரிழந்த ஆட்டுக்குட்டியை காவல் நிலையம் முன்பு வைத்து விட்டு சென்றதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வி.எம்.சி. காலனி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த ஆட்டின் மீது அவ்வழியாக வந்த ஒருவர் மோதியதில் ஆட்டுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. உடனே, அங்கிருந்த ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் புவனேஷ் மற்றும் அவரது உறவினர் வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வாணியம்பாடி ஜாப்ரபாத் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பது தெரியவந்தது. அவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு உடனடியாக வந்து தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டதாகவும் தன்னை
 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வி.எம்.சி. காலனி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த ஆட்டின் மீது அவ்வழியாக வந்த ஒருவர் மோதியதில் ஆட்டுக்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

உடனே, அங்கிருந்த ஆட்டுக்குட்டியின்  உரிமையாளர் புவனேஷ் மற்றும் அவரது உறவினர் வெங்கடேஷ் இருசக்கர வாகனத்தில் வந்தவரை தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வாணியம்பாடி ஜாப்ரபாத் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் என்பது தெரியவந்தது.

அவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு உடனடியாக வந்து தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து விட்டதாகவும்  தன்னை தாக்கியவர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதன் பேரில் வி.எம்.சி.காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் புவனேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதனால், புவனேஷ் உறவினர்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு உயிரிழந்த ஆட்டுக்குட்டியுடன் வந்து இருசக்கர வாகனத்தில் ஆட்டுக்குட்டியை மோதிய கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் மீது புகார் ஒன்றை கொடுத்தனர். ஆனால் காவல்துறையினர் புகார் எடுக்க மறுத்தனர். கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் மோதிய இரு சக்கர வாகனத்தையும் அவரிடமே கொடுத்து அனுப்பி விட்டனர். இதனால்  காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர் என்று ஆட்டுக்குட்டியை காவல் நிலையம் முன்பு வைத்துவிட்டு புவனேஷ் உறவினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.