×

தலையணையால் அழுத்தி கணவரை கொல்ல முயற்சி; மனைவி, கள்ளக்காதலன் கைது

திருப்பத்தூர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(36). ராணுவ வீரரான இவருக்கு, வானதி(30) என்ற மனைவி உள்ளார். கணவர் வெளிமாநிலத்தில் பணியாற்றும் நிலையில் வானதிக்கு, மரிமானிகுப்பம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெயகுமார்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக விநாயகமூர்த்தி சொந்த
 

திருப்பத்தூர்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைதுசெய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(36). ராணுவ வீரரான இவருக்கு, வானதி(30) என்ற மனைவி உள்ளார். கணவர் வெளிமாநிலத்தில் பணியாற்றும் நிலையில் வானதிக்கு, மரிமானிகுப்பம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜெயகுமார்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக விநாயகமூர்த்தி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த விநாயக மூர்த்தியை, அவரது மனைவி வானதி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். மூச்சு விடமுடியாமல் திமிறி எழுந்த விநாயக மூர்த்தி, ஜெயக்குமாரின் கையை பலமாக கடித்து உள்ளார். இதில், காயமடைந்த ஜெயகுமார் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடினார்.

அருகாமையில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் சத்தம்கேட்டு வந்து பார்த்தபோது விநாயகமூர்த்தி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாக அலறி துடித்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து, கள்ளக்காதலனுடன் சேர்ந்து தன்னை கொலைசெய்ய முயன்ற வானதி மீது விநாயகமூர்த்தி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வானதி மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரையும் கைதுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.