×

“திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை” – அமைச்சர் கே.சி.வீரமணி உறுதி

திருப்பத்தூர் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இனி வரும் காலங்களில் தொடர்ந்து இயங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.சி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ஆம்பூர், ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 65 ஆயிரம் மெட்ரிக்டன் கரும்பு அரவை
 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இனி வரும் காலங்களில் தொடர்ந்து இயங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.சி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ஆம்பூர், ஆரணி, போளூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 65 ஆயிரம் மெட்ரிக்டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் நடப்பு பருவத்தில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு நடவுசெய்து, கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவுசெய்து பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டில் திருப்பத்தூர் பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காமல் இருந்ததாக தெரிவித்த அமைச்சர் வீரமணி, இனி வரும் காலங்களில் ஆலை தொடர்ந்து இயங்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு இருப்பதாக கூறினார். இதற்கு விவசாயிகளின் ஒத்துழைப்பு தேவை என்பதால் கரும்பு நடவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.