×

தமிழகத்துக்கு கடத்தமுயன்ற ரூ.20 லட்சம் செம்மரங்கள் பறிமுதல் – ஒருவர் கைது

திருப்பத்தூர் திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தமுயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்தனர். தமிழக – ஆந்திர எல்லை பகுதியான நாட்றம்பள்ளி மல்லனூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் குப்பம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து தமிழகம் நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் காரினுள்ளே செம்மரங்களை மறைத்து கடத்திச்சென்றது
 

திருப்பத்தூர்

திருப்பதியில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தமுயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்தனர்.

தமிழக – ஆந்திர எல்லை பகுதியான நாட்றம்பள்ளி மல்லனூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் குப்பம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து தமிழகம் நோக்கி சென்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் காரினுள்ளே செம்மரங்களை மறைத்து கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து காரில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், செம்மரங்களை கடத்திவந்த திருப்பத்தூரை சேர்ந்த திருப்பதி என்பவரையும் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்