×

திருப்பத்தூரில் பழமையான மரங்கள் மறுநடவு – ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

திருப்பத்தூர் திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் இருந்த பழமையான மரங்களை வேருடன் அகற்றி, மறுநடவு செய்யும் பணியை இன்று மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.திருப்பத்தூரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் சுமார் 109.71 கோடி மதிப்பில் 14 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்ததார். நிலம்
 

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் இருந்த பழமையான மரங்களை வேருடன் அகற்றி, மறுநடவு செய்யும் பணியை இன்று மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.திருப்பத்தூரின் மையப்பகுதியில் உள்ள வனச்சரகர் அலுவலகத்தில் சுமார் 109.71 கோடி மதிப்பில் 14 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்ததார்.

நிலம் அளவீடு செய்யும் பணிகள் முடிந்த நிலையில், கட்டுமான பணிகளுக்காக அங்குள்ள பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மரங்களை வெட்டாமல் வேருடன் அகற்றி, மற்றொரு இடத்தில் மறுநடவு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்படி, இன்று மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில், மறுநடவு செய்யும் பணிகளை ஆட்சியர் சிவன்அருள் இன்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், மற்ற மாநிலங்களில் மேற்கொள்வது போல செய்தால் செலவாகும் என்பதால், மணல் அள்ளும் இயந்திரம் மற்றும் கிரேன் மூலம் மரங்களை மறுநடவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கியதாகவும், இதன்படி மரங்களை சுற்றி இடைவெளி விட்டு குழிதோண்டி, பெரிய வேர்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றிவிட்டு, மீதமுள்ள வேர்களில் மண் ஒட்டி இருக்கும்படி மரங்களை வேரோடு தோண்டி எடுக்கப்படுவதாகவும், பின்னர் வேறு இடத்தில் 5 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட குழியில் மரங்களை மறுநடவு செய்து, இயற்கை உரங்கள் மற்றும் மருந்துக் கரைசலைத் தெளித்தால் சில நாட்களில் மரங்கள் துளிர்த்து வளர தொடங்கி விடும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இங்கிருந்து அகற்றப்படும் மரங்களை பொதுப் பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி வளாகத்தில் மறுநடவு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக கூறிய அதிகாரிகள், சில மரங்கள் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ஆட்சியரின் இந்த நடவடிக்கை பழமையான மரங்களை பாதுகாக்க உதவும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்