×

தமிழகம் முழுக்க ஒரு கோடி பனை விதைகள் நடவு! வேர்களின் லட்சியப் பயணம்

சமூக ஆர்வலர்கள், மற்றும் வேர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இணைந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் ஏரியில் சீமைகருவேலமரங்களை அகற்றி ஏரியை தூய்மை செய்து, பனைவிதைகளை நட்டு வைத்தனர். பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரும், காவல் துறை துணை கண்காணிப்பாளரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். ஜெசிபி மூலம் ஏரியில் சீமைகருவேலமரங்கள் அகற்றும் பணியும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு கொடி பனை விதைகள் நடவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் வேர்கள்
 

சமூக ஆர்வலர்கள், மற்றும் வேர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் இணைந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பனூர் ஏரியில் சீமைகருவேலமரங்களை அகற்றி ஏரியை தூய்மை செய்து, பனைவிதைகளை நட்டு வைத்தனர்.

பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரும், காவல் துறை துணை கண்காணிப்பாளரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெசிபி மூலம் ஏரியில் சீமைகருவேலமரங்கள் அகற்றும் பணியும் இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் ஒரு கொடி பனை விதைகள் நடவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் வேர்கள் இயக்கம், செட்டியப்பனூர் ஏரியைத்தொடர்ந்து ஒரு வாரம் வாணியம்பாடி வருவாய் கோட்டத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் 25ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.