×

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் கொள்ளை!

திருப்பத்தூர் ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகரை சேர்ந்தவர் பாருக். இவருக்கு அத்தர் பேகம் என்ற மனைவியும், சாதிக் என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் பாரூக் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, அத்தர் பேகமும், அவரது மகன் சாதிக்கும் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று
 

திருப்பத்தூர்

ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3.5 லட்சம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகரை சேர்ந்தவர் பாருக். இவருக்கு அத்தர் பேகம் என்ற மனைவியும், சாதிக் என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் பாரூக் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, அத்தர் பேகமும், அவரது மகன் சாதிக்கும் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை சாதிக் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3.50 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, சாதிக் ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆம்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.