×

ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய மர்ம நபர்கள்- கொடுக்கல் வாங்கல் தகராறா?

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரை, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்தவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் நகைகடை தெருவை சேர்த்தவர் விமல்சந்த் மகன் திலீப்குமார். இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் ரியால் எஸ்டேட் தொழில் செயது வருகிறார். இந்த நிலையில், அவரை சிலர் கடத்தி விட்டதாக அவரது சகோதரர் மனோகர் லால் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள புகாரில், தனது
 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரை, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்தவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் நகைகடை தெருவை சேர்த்தவர் விமல்சந்த் மகன் திலீப்குமார்.

இவர் அப்பகுதியில் நகைக்கடை மற்றும் ரியால் எஸ்டேட் தொழில் செயது வருகிறார். இந்த நிலையில், அவரை சிலர் கடத்தி விட்டதாக அவரது சகோதரர் மனோகர் லால் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள புகாரில், தனது சகோதரரை தொடர்பு கொண்ட சிலர், மாதனூர் ஓன்றியம் விண்ணங்கலம் ஊராட்சி அடுத்த காட்டுக்கொள்ளை பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் என்கிற நிலத்தை வாங்க வந்துள்ளார்கள் என சிலர் அழைத்துள்ளனர். நிலத்தை காட்டிவிட்டு புறப்படும்போது, கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் எனது சகோதரரை கடத்திச் சென்றுள்ளனர். இதி தொடர்பாக எனது சகோதரரின் கார் ஓட்டுநர்கள் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு விபரம் சம்பந்தமாக பேச்சு வார்தைக்கு நடத்த அழைத்துச் செல்வதாக திலீப்குமாரை கடத்தியவர்கள் போனில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் டிஎஸ்பி மற்றும் ஆம்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.