×

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய, அமைச்சர் நிலோபர் கபில்!

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சிகளில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்த 500-க்கும் மேற்பட்டோருக்கு, நலவாரிய அடையாள அட்டை மற்றும் அரிசி, பருப்பு உள்ளிவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து பயனாளிகள் மத்தியில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், தமிழக
 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சிகளில் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுசெய்த 500-க்கும் மேற்பட்டோருக்கு, நலவாரிய அடையாள அட்டை மற்றும் அரிசி, பருப்பு உள்ளிவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பயனாளிகள் மத்தியில் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், தமிழக மக்கள், அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், திமுக கொண்டு வந்த ஒரு திட்டமாவது இன்று தமிழகத்தில் நடைமுறையில் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் நிலோபர் கபில், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதுடன், தற்போது வரை தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குவது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.