×

ஃபாலோ -அப்: ஆட்டோ டிரைவர் இறப்பில் சந்தேகம் -உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல்

ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் இறப்பில் சந்தேகம் இருப்பதால், போலீசார் இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் செய்ததால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ராகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் மலை அடிவாரத்தில் அக்ராகரம் வேடி வட்டம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(40). இவர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த நான்கு நண்பர்களுடன் நேற்று தினம் மது குடிக்க சென்று பின்னர் மது போதையில் அருகில் உள்ள
 

ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் இறப்பில் சந்தேகம் இருப்பதால், போலீசார் இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியல் செய்ததால் நாட்றம்பள்ளி அருகே பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ராகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் மலை அடிவாரத்தில் அக்ராகரம் வேடி வட்டம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(40). இவர் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த நான்கு நண்பர்களுடன் நேற்று தினம் மது குடிக்க சென்று பின்னர் மது போதையில் அருகில் உள்ள குளத்தில் தாமரை பூ பறிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி இறந்துள்ளார்.

இவரது சடலத்தை நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் பொது மக்களின் உதவியுடன் ஆறு மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.

இந்நிலையில் பிரோத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் சடலத்தை போலீசார் ஒப்படைத்துள்ளனர். சடலம் ஏற்றி வந்த வாகனத்தை ஊருக்குள் விடாமல் சடலத்துடன் உறவினர்கள் , மற்றும் அவரது தாய்,மனைவி, மற்றும் அரண்டு மகன்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நாட்றம்பள்ளி திருப்பத்தூர் சாலை அக்ராகரம் ஏரிக்கோடி பகுதியில் திடிரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் ஆம்பூர் சச்சிதானந்தம் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடம் விரைந்து பொதுமக்களிடம் சமரசம் பேசி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்த சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

ஆட்டோ டிரைவரை வீட்டில் இருந்து மது அறுந்த அழைத்து சென்ற புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன்,கண்ணன், மகேந்திரன் ஆகியேரிடம் நாட்றம்பள்ளி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.