×

10 வயது சிறுவன் உட்பட இரட்டை கொலை: தந்தை, மகன் கைது!

சொத்து தகராறில் தாத்தா, பேரன் இருவரையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (52) இவரது சகோதரர் சாம்ராஜ். இவர்களுக்கு சொந்தமான 2.70 ஏக்கர் விவசாய நிலத்தை சரிபாதியாக பிரிநத்து விவசாயம் செய்து கொள்ளும்படி இவர்களின் தந்தை கூறியுள்ளார். பின்னர் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த போயுள்ளார். இதை தொடர்ந்து சாம்ராஜ் வருவாய் துறையிடம் போலியாக தான் ஒருவர் மட்டுமே வாரிசு என காட்டி
 

சொத்து தகராறில் தாத்தா, பேரன் இருவரையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெப்பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (52) இவரது சகோதரர் சாம்ராஜ். இவர்களுக்கு சொந்தமான 2.70 ஏக்கர் விவசாய நிலத்தை சரிபாதியாக பிரிநத்து விவசாயம் செய்து கொள்ளும்படி இவர்களின் தந்தை கூறியுள்ளார். பின்னர் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த போயுள்ளார். இதை தொடர்ந்து சாம்ராஜ் வருவாய் துறையிடம் போலியாக தான் ஒருவர் மட்டுமே வாரிசு என காட்டி நிலத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து முடித்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்த விலையில் பெருமாளுக்கும் சாம் ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது கடந்த ஆண்டு இதே பிரச்சினையில் பெருமாளின் மகன் சுரேஷ் தாக்கியதில் சாம்ராஜின் மண்டை உடைந்துள்ளது. இதனால் அவர் சிறை சென்று சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நிலத்தை பிரிப்பது கொடுப்பது சம்பந்தமாக வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு சர்வேயர் மூலமாக நிலத்தை இருவருக்கும் பிரித்து கொடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பெருமாள் 10 வயதான தனது பேரன் சந்துருவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வெப்பலம்பட்டி பகுதியிலிருந்து கொத்த கோட்டை பகுதியில் உள்ள அரசு பால் கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று பெருமாள் மற்றும் சந்துரு இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு சென்றது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரட்டை கொலை சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து கொத்தகோட்டை அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பெருமாளின் தம்பி சாம்ராஜ் மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர். நிலத்தகராறில் தங்களால் நிம்மதியாக வாழ முடியாததால் அண்ணன் பெருமாளை தீர்த்து கட்ட முடிவு செய்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.