×

குப்பைகளை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பத்தூர் ஆம்பூர் நகராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் தனது பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து நகராட்சி அலுவலகத்தில் கொண்டுவந்து கொட்டிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு பகுதிகளில் குப்பைகளை சரிவர நகராட்சி ஊழியர்கள் அகற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து இன்று 4-வது வார்டு கஸ்பா-அ பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனது பகுதியில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து நகராட்சியில் கொட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுகாதார
 

திருப்பத்தூர்

ஆம்பூர் நகராட்சியை முற்றுகையிட்டு பொதுமக்கள் தனது பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து நகராட்சி அலுவலகத்தில் கொண்டுவந்து கொட்டிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு பகுதிகளில் குப்பைகளை சரிவர நகராட்சி ஊழியர்கள் அகற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து இன்று 4-வது வார்டு கஸ்பா-அ பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனது பகுதியில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து நகராட்சியில் கொட்டி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சுகாதார ஆய்வாளர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி உட்பட்ட 36 வார்டு பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.