×

திருப்பத்தூர்: பணியின்போது மயங்கி விழுந்து தலைமை காவலர் உயிரிழப்பு

ஜோலார்பேட்டை அருகே பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த தலைமை காவலரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(45). திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஶ்ரீதருக்கு, திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாரா பணிக்கு சென்றபோது ஶ்ரீதர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு
 

ஜோலார்பேட்டை அருகே பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த தலைமை காவலரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்(45). திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஶ்ரீதருக்கு, திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாரா பணிக்கு சென்றபோது ஶ்ரீதர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஶ்ரீதர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் நேற்று மாலை ராஜீவ்காந்தி நகர் அருகேயுள்ள சுடுகாட்டில் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.