×

போளூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு சீல் வைப்பு!

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.பாத தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது விதிகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை போளூர் பகுதியில் நேற்று முன்தினம் வட்டாட்சியர் சாப்ஜான் தலைமையில், போலீசார்
 

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 7 கடைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.பாத

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கின்போது விதிகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை போளூர் பகுதியில் நேற்று முன்தினம் வட்டாட்சியர் சாப்ஜான் தலைமையில், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போளூர் சுப்பிரமணியம் தெரு, ரயில் நிலையம் சாலை, பஜார் வீதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கை மீறி 7 கடைகள் செயல்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த 7 கடைகளையும் வட்டாட்சியர் சாப்ஜான் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், 7 கடைகளின் உரிமையாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் 7 கடைகளுக்கு சீல்வைக்கப்பட்ட சம்பவம் போளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.