×

ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ஏரியில் இரவுநேரங்களில் மணல்திருட்டில் ஈடுபட்ட லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர், மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்றிரவு ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். இதனை கண்ட கடத்தல்காரர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.
 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ஏரியில் இரவுநேரங்களில் மணல்திருட்டில் ஈடுபட்ட லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர், மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.


இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்றிரவு ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். இதனை கண்ட கடத்தல்காரர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

இதனையடுத்து, லாரியை சிறைபிடித்த கிராமமக்கள், இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து, தப்பிச்சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.