×

கட்டிட ஒப்பந்ததாரர் வெட்டிக் கொலை – கொலையாளிகளுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் அருகே கட்டிட ஒப்பந்ததார் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அயப்பாக்கம் அடுத்த அன்னை அஞ்சுகம் நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(35). கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் பாண்டியனுக்கு ஹரிநிலா (28) என்ற மனைவியும், 2 மகள்கள் உட்பட 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு கூலி பணம் கொடுப்பதற்காக பாண்டியன் அயப்பாக்கம் விவேகானந்தா நகர் பிரதான சாலையில் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் அருகே கட்டிட ஒப்பந்ததார் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அயப்பாக்கம் அடுத்த அன்னை அஞ்சுகம் நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(35). கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும்

பாண்டியனுக்கு ஹரிநிலா (28) என்ற மனைவியும், 2 மகள்கள் உட்பட 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு கூலி பணம் கொடுப்பதற்காக பாண்டியன் அயப்பாக்கம் விவேகானந்தா நகர் பிரதான சாலையில் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், திடீரென பாண்டியனை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் கழுத்து மற்றும் தலை பகுதியில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் துணை ஆணையர் தீபாசத்தியன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருமுல்லைவாயல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.


அதில், அயப்பாக்கம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் மீன் வியாபாரி வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் பாண்டியன் 5-வது குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டதும், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மீன்வியாபாரி கொலைக்கு, பழிக்குப்பழியாக அவரது கூட்டாளிகள் பாண்டியனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.