×

லாரியில் கஞ்சா கடத்தல்- 205 கிலோ கஞ்சா பறிமுதல்,4 பேர் கைது

திருவள்ளூர் சென்னை அருகே, வண்டலூர் – மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் கனரக வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தன. அந்த சாலையில் கஞ்சா எடுத்துச் செல்லப்படுவதாகவந்த ரகசிய தகவலையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் பயணம் செய்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை அடுத்து,
 

திருவள்ளூர்

சென்னை அருகே, வண்டலூர் – மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் கனரக வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தன. அந்த சாலையில் கஞ்சா எடுத்துச் செல்லப்படுவதாக
வந்த ரகசிய தகவலையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று வண்டலூர் – மீஞ்சூர்

வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் பயணம் செய்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் பல மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது பிடிபட்டவர்கள் சுதாகர், அபிலாஷ், சம்சீர், சுபைத் என்பது தெரியவந்தது.


அவர்களை கைது செய்த பொலீசார், அவர்களிடம் இருந்து 205 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடன்,
கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஒரே இடத்தில் 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.