×

லோன் பெற்று தருவதாக இளைஞரிடம் ரூ.3 லட்சம் மோசடி – ஒருவர் கைது

திருவள்ளூர் திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி இளைஞரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன். இவர் தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த ஜுனோ (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ஜுனோ தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார்
 

திருவள்ளூர்

திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி இளைஞரிடம் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன். இவர் தொழில் தொடங்குவதற்காக வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த ஜுனோ (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது, ஜுனோ தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிதி நிறுவனங்களில் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். மேலும், கடன்பெற அதிகாரிகளுக்கு கொடுப்பதாக கூறி 3 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி கடன் பெற்றுத் தராததாக கூறப்படுகிறது.

மேலும், பணத்தை திருப்பிகேட்ட போது, அதனை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஐய்யப்பன், மோசடி குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.பி., அரவிந்தன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

போலீசாரின் விசாரணையில், ஜீனோ கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து, அவரை போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.