×

5 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி

திருவள்ளூர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக, பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் விளங்கி வருகிறது. இந்த ஏரி 35 அடி உயரமும், 3 அயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. கடந்த நவம்பர் மாதம் நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பெய்த தொடர் மழையினால், ஏரியின் நீர்மட்டம் 35 அடியில் 34.20 அடியை எட்டியது. இதனால் ஏரியில்
 

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக, பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் விளங்கி வருகிறது. இந்த ஏரி 35 அடி உயரமும், 3 அயிரத்து 231 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது.

கடந்த நவம்பர் மாதம் நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பெய்த தொடர் மழையினால், ஏரியின் நீர்மட்டம் 35 அடியில் 34.20 அடியை எட்டியது. இதனால் ஏரியில் இருந்து கடந்த 27 ஆம் தேதி முதல் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று ஏரி தனது முழு கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளதாக பொதுப் பணித்துறையினர் அறிவித்துள்ளனர். பூண்டி ஏரி முழுமையாக நிரம்பியதால் நடப்பு ஆண்டு சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பூண்டி ஏரிக்கு தற்போது, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 633 கன அடி நீரும், நகரி ஆற்றிலிருந்து 4 அயிரம் கனஅடி நீரும் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் வரும் நீர் என மொத்தம் 4 ஆயிரத்து 804 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 887 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.