×

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி!

நெல்லை நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த தந்தை, மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுவாமிநாதன் (58). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில், ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சங்கர சுப்ரமணியன்(20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சுவாமிநாதன், குடும்பத்துடன் நெல்லை சந்திப்பு பகுதிக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, நெல்லை கைலாசபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி
 

நெல்லை

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த தந்தை, மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுவாமிநாதன் (58). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில், ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சங்கர சுப்ரமணியன்(20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சுவாமிநாதன், குடும்பத்துடன் நெல்லை சந்திப்பு பகுதிக்கு சென்றிருந்தார்.

தொடர்ந்து, நெல்லை கைலாசபுரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்ற சுவாமிநாதன், அங்கு மகன் சங்கர சுப்ரமணியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரத விதமாக சுவாமிநாதன் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கினார். அப்போது, அவரை மீட்க முயன்ற சங்கர சுப்ரமணியும் நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட தேடலுக்கு பின் சுவாமிநாதனின் உடல் மீட்கப்பட்டது. மேலும், இரவாகியதால் சங்கர சுப்ரமணியனை தேடும் பணியை தற்காலிக நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து நெல்லை ஜங்சன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.