×

உணவகம் மீது வெடிபொருட்கள் வீச்சு – வங்கி ஊழியர் படுகாயம்

தஞ்சாவூர் தஞ்சை அருகே உணவகத்தில் மர்மநபர்கள் வெடிபொருட்களை வீசியதில், தனியார் வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தார். தஞ்சை மாவட்டம் கரந்தட்டான்குடி செங்கல்கார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (47). இவர் கரந்தை பேருந்துநிறுத்தம் அருகே உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு முத்துக்குமார் உணவகத்தில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் கடையை நோக்கி வெடி பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். அப்போது, உணவகம் முன்பு வைத்திருந்த ஷோ கேஸ் மீது வெடிபொருட்கள் பட்டதில், அதன் கண்ணாடி
 

தஞ்சாவூர்

தஞ்சை அருகே உணவகத்தில் மர்மநபர்கள் வெடிபொருட்களை வீசியதில், தனியார் வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தார். தஞ்சை மாவட்டம் கரந்தட்டான்குடி செங்கல்கார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (47). இவர் கரந்தை பேருந்துநிறுத்தம் அருகே உணவகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு முத்துக்குமார் உணவகத்தில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் கடையை நோக்கி வெடி பொருட்களை வீசிவிட்டு தப்பியோடினர். அப்போது, உணவகம் முன்பு வைத்திருந்த ஷோ கேஸ் மீது வெடிபொருட்கள் பட்டதில், அதன் கண்ணாடி வெடித்துச் சிதறியது. இதில் ராமாபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியர் வெங்கடேசன் என்பவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பாட்டார். இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தஞ்சை மேற்கு போலீசார், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இதில், உணவகத்தில் வீசப்பட்டது பால்ரஸ் கலந்த வெங்காய வெடி என்பது தெரியவந்தது- மேலும், சில நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள மற்றொரு உணவகத்தில் மதுபோதையில் இருந்த நபர்கள் கதராறில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்க நினைத்து அந்தநபர்கள் கடையை மாற்றி வீசி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.