×

14 ஆவது ஊதிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தை நடத்தக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போடப்படுவது வழக்கம். ஊழியர்களின் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இன்னும் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த மார்ச்
 

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருச்சியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போடப்படுவது வழக்கம். ஊழியர்களின் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில், இன்னும் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இதனை கண்டித்து கடந்த மார்ச் மாதம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் கூட எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

இந்த நிலையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து உடனே பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க வேண்டும் என தஞ்சாவூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு முன்பு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில், நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் ஒய்வு பெற்றவர்களுக்கான் 18 மாத பண பலன்களை வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.