×

தஞ்சையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடட்னர். தஞ்சாவூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து கழகங்களை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், போக்குவரத்து கழகங்களில் வரவு செலவுக்கு இடையே உள்ள வேறுபாட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் முடித்திடவும், 16 மாத டி.ஏ தொகையை உடனே வழங்கிடவும்
 

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடட்னர். தஞ்சாவூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, போக்குவரத்து கழகங்களை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும், போக்குவரத்து கழகங்களில் வரவு செலவுக்கு இடையே உள்ள வேறுபாட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் முடித்திடவும், 16 மாத டி.ஏ தொகையை உடனே வழங்கிடவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் செய்தனர். அத்துடன் 6ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், அன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரித்தனர்.