×

பணி நியமன முறைகேடு குறித்து ஆளுநர் விசாரிக்க கோரிக்கை

தஞ்சாவூர் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பணி நியமனங்களின் போது, லஞ்சம் பெற்றுகொண்டு 43 பணியிடங்கள் நிரப்ப பட்டதாகவும், இதுகுறித்து, கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தபோதும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் அரசியல் குறுக்கீடு
 

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என ஆய்வு மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் நிர்வாகிகள், தமிழ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பணி

நியமனங்களின் போது, லஞ்சம் பெற்றுகொண்டு 43 பணியிடங்கள் நிரப்ப பட்டதாகவும், இதுகுறித்து, கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தபோதும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் அரசியல் குறுக்கீடு காரணமாக, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். எனவே, இந்த விவகாரம் குறித்து, தமிழக ஆளுநர் தலைமையில் உயர்நிலை குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுகொண்டனர்.