×

தஞ்சாவூர்- பெரிய கோயில் முன்பு நாதஸ்வரம் வாசித்த இசைக் கலைஞர்கள்

தஞ்சாவூர் உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தஞ்சை பெரிய கோயில் முன் நாதச்வர கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இசைத்தனர். பெண் நாதஸ்வர கலைஞர் உள்ளிட்ட அனைவரும் கோவில் முன்பு வரிசையாக நின்று வாசித்தனர். சுற்றுலா தலங்களை பாதுகாக்கவேண்டும், தூய்மையாக வைத்திருக்கவேண்டும், தற்போது உள்ள தொற்று காலத்தில் பாதுகாப்புடன் சுற்றுலா செல்ல வேண்டும்
 

தஞ்சாவூர்

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தஞ்சை பெரிய கோயில் முன் நாதச்வர கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்திய சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு இசைத்தனர்.


பெண் நாதஸ்வர கலைஞர் உள்ளிட்ட அனைவரும் கோவில் முன்பு வரிசையாக நின்று வாசித்தனர்.

சுற்றுலா தலங்களை பாதுகாக்கவேண்டும், தூய்மையாக வைத்திருக்கவேண்டும், தற்போது உள்ள தொற்று காலத்தில் பாதுகாப்புடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.