×

விவசாய நிலத்தில் பழங்கால சிலைகள், பொருட்கள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் குழி தோண்டியபோது பழங்கால சிலைகள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவெட்டி கிராமத்தில் உள்ள வைரவர் சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் லெனின் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கொய்யா சாகுபடி செய்வதற்காக நேற்று வயலில் குழிதோண்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, வயலின் மையப் பகுதியில குழிதோண்டியபோது வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த லெனின் அங்குசென்று பார்த்தபோது, 5 சாமி சிலைகள்
 

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் குழி தோண்டியபோது பழங்கால சிலைகள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவெட்டி கிராமத்தில் உள்ள வைரவர் சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் லெனின் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கொய்யா சாகுபடி செய்வதற்காக நேற்று

வயலில் குழிதோண்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, வயலின் மையப் பகுதியில குழிதோண்டியபோது வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த லெனின் அங்குசென்று பார்த்தபோது, 5 சாமி சிலைகள் உள்பட 27 பழங்காலத்து பொருட்கள் இருந்தன. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மற்றும் வி.ஏ.ஓ ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி வேறு எந்த பொருளும் இருக்கிறதா? என வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்