×

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு – விழா எடுத்து அசத்திய குடும்பம்!

தஞ்சாவூர் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி, விருந்து வைத்து தஞ்சையில் ஒரு குடும்பம் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. தஞ்சாவூர் தென்றல் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி இறந்த நிலையில், இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அதனால் தனியாக வசித்து வருபவர், தனக்கு துணையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு – விழா எடுத்து அசத்திய குடும்பம்!#tamilnadu #dogs #pregnantdog #pet #petdog #TTN pic.twitter.com/ZzlhAICsVV — Top
 

தஞ்சாவூர்

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்தி, விருந்து வைத்து தஞ்சையில் ஒரு குடும்பம் கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் தென்றல் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனைவி இறந்த நிலையில், இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அதனால் தனியாக வசித்து வருபவர், தனக்கு துணையாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

அதற்கு அபிராமி என செல்லமாக பெயரிட்டு வளர்த்து வரும் நிலையில், தற்போது அவரது வளர்ப்பு நாய் 50 நாட்கள் கர்ப்பமாக இருக்கிறது. இதையடுத்து வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என ஆசைப்பட்ட அவர் உறவினர்கள் சுற்றத்தாருக்கு அழைப்பு விடுத்தார்.

வீட்டு வாசலில் பேனர் அடித்து கட்டியதுடன், நாய்க்கு பட்டாடை, வளையல்கள் என அணிகலன்களை அணிவித்தார். அவரது உறவினர்கள் அங்குள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்துதுடன், நாய்க்கு சந்தனம் குங்குமம் இட்டு வளையல் அணிவித்தனர்.

வீட்டில் உள்ளவர்களும், புத்தாடை அணிந்து, விழா கொண்டாட்டத்துடன் பங்கேற்றனர். நிகழ்வுக்கு வந்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் வழங்கினார்.

வளர்ச்சி நாய்க்கு வளைகாப்பு நடத்திய கிருஷ்ணமூர்த்தியை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர்.