×

தஞ்சை- உரத் தட்டுப்பாடு – வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி நடவு பணிகளுக்கு ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் குறுவை அறுவடை முடிந்து, தற்போது சம்பா தாளடி நடவு பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு தட்டுப்படு ஏற்பட்டுள்ளதால் பயிர்களுக்கு காலத்தில் இடவேண்டிய அடி உரம் விடப்படாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஒரு ஏக்கர் நிலத்திக்கு ஒரு முட்டை
 

தஞ்சை

தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி நடவு பணிகளுக்கு ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் குறுவை அறுவடை முடிந்து, தற்போது சம்பா தாளடி நடவு பணிகள் திவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், யூரியா உள்ளிட்ட உரங்களுக்கு

தட்டுப்படு ஏற்பட்டுள்ளதால் பயிர்களுக்கு காலத்தில் இடவேண்டிய அடி உரம் விடப்படாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் ஒரு ஏக்கர் நிலத்திக்கு ஒரு முட்டை யூரியா மட்டுமே வழங்கப்படும் நிலையில், தனியர் உரக்கடைகளில் கூடுதல் விலையில் யூரியா டி.ஏ.பி, பொட்டஸ் உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உரத் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடவு வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிக விலைக்கு விற்கும் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.