×

ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரி பறிமுல்

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை மாவட்டம்பாபநாசம் தாலுகா மெலட்டூர் சரகத்தில் ஆற்றிலிருந்து கள்ளத்தனமாக மணல் கடத்தி வரப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்றிரவு பாபநாசம் வட்டாட்சியர் முருகவேல் தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொத்தங்குடி கிராமத்தில் சிறிய வாகனத்தில் மணல் ஏற்றி வந்தவர்களை, தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி இன்றி ஆற்று
 

தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை மாவட்டம்பாபநாசம் தாலுகா மெலட்டூர் சரகத்தில் ஆற்றிலிருந்து கள்ளத்தனமாக மணல் கடத்தி வரப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்றிரவு பாபநாசம் வட்டாட்சியர் முருகவேல் தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொத்தங்குடி கிராமத்தில் சிறிய வாகனத்தில் மணல் ஏற்றி வந்தவர்களை, தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, உரிய அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வட்டாட்சியர் சிறிய லாரியை பறிமுதல் செய்து, மெலட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மணல் கடத்தல் குறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.