×

வன்னியர் சமூகத்தினருக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பேரூராட்சி அலுவலகங்களில் பாமக சார்பில் மனு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருராட்சி மற்றும் மண்டல அலுவலங்களில் பாமக சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்தில், அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக துணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் ஏராளமானோர் பேரணியாக சென்று கோரிக்கை மனு வழங்கினர். இதேபோல், மெலட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர்
 

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருராட்சி மற்றும் மண்டல அலுவலங்களில் பாமக சார்பில் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி பேரூராட்சி அலுவலகத்தில், அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக துணை செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் ஏராளமானோர் பேரணியாக சென்று கோரிக்கை மனு வழங்கினர். இதேபோல், மெலட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று கோரிக்கை மனுவை வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் திருமூர்த்தியிடம், வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக பொதுச்செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் அக்கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இதனையொட்டி, நாட்றம்பள்ளி ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து அக்கட்சியின் துணை தலைவர் பொன்னுசாமி, மகளிரணி தலைவர் நிர்மலா ராசா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டவாறு பேரணியாக பேரூராட்சி அலுவலகம் சென்றனர்.

சென்னை வளசரவாக்கம் மண்டல அலுவலக உதவி ஆணையர் சசிகலாவிடம், 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மாவட்ட செயலாளர் எம்.கே.பிரகாஷ் தலைமையில் பாமகவினர் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, மண்டல அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த 200-க்கும் மேற்பட்ட பாமகவினர், 20 சதவீத இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.