×

“பயிர் சேதம் குறித்து, ஜன. 29-க்குள் அறிக்கை தர உத்தரவு” – ககன்தீப் சிங் பேடி

தஞ்சாவூர் பயிர் சேதம் குறித்த அறிக்கையை ஜனவரி 29-க்குள் உயர் அதிகாரிகளிடம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளதாக, வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் வாளமர்கோட்டை பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த ககன்தீப் சிங் பேடி, பின்னர் ஒரத்தநாடு அருகே அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் உள்ள நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, தஞ்சை
 

தஞ்சாவூர்

பயிர் சேதம் குறித்த அறிக்கையை ஜனவரி 29-க்குள் உயர் அதிகாரிகளிடம் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளதாக, வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் வாளமர்கோட்டை பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த ககன்தீப் சிங் பேடி, பின்னர் ஒரத்தநாடு அருகே அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் உள்ள நெல் உலர்த்தும் நவீன இயந்திரத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையினால் நெற் பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாவும், பயிர் சேதத்தை கணக்கிடும் பணியில் வருவாய், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் இணைந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், ஆய்வு பணியை விரைந்து முடிந்து, ஜனவரி 29ம் தேதிக்குள் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி கூறினார். அறிக்கை வழங்கப்பட்ட பிறகு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முன்கூட்டியே வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறுவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.