×

பூச்சி மருந்தை தவறுதலாக குடித்த தாய் – மகள் பலி… மற்றொரு மகள் கவலைக்கிடம்…

தஞ்சாவூர் பேராவூரணி அருகே பூச்சி மருந்தை தவறுதலாக குடித்த பெண் மற்றும் அவரது 13 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த கட்டயங்காடு பகுதியை சேர்ந்தவர்வர்கள் மதிவாணன்(45)-புவனா (40) தம்பதியர். இவர்களுக்கு அக்ஷயா (13), ஹேமாஸ்ரீ (10) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சிறுமிகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு புவனாவிற்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
 

தஞ்சாவூர்

பேராவூரணி அருகே பூச்சி மருந்தை தவறுதலாக குடித்த பெண் மற்றும் அவரது 13 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த கட்டயங்காடு பகுதியை சேர்ந்தவர்வர்கள் மதிவாணன்(45)-புவனா (40) தம்பதியர். இவர்களுக்கு அக்ஷயா (13), ஹேமாஸ்ரீ (10) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சிறுமிகள் அங்குள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு புவனாவிற்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மதிவாணன் வெளியூரில் செய்துவந்த பணியை கைவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மதிவாணன் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த புவனா, தென்னை மரத்தில் பூச்சிகளை அழிக்க வைக்கப்படும் விஷ மாத்திரைகளை தவறுதலாக தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு, தனது 2 மகள்களுக்கும் கொடுத்துள்ளார். இதில் மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். இரவு வீட்டிற்கு திரும்பியபோது மனைவி, குழந்தைகள் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மதிவாணன் மூவரையும் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே புவனா மற்றும் அக்சயா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹேமாஸ்ரீ-க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.