×

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை – தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். தஞ்சை வைரம் நகரில் உள்ள கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளதாகவும், சம்பாவும் இலக்கை விஞ்சும் என எதிபார்ப்பதாகவும் தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாத வகையில்
 

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். தஞ்சை வைரம் நகரில் உள்ள கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால்

குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளதாகவும், சம்பாவும் இலக்கை விஞ்சும் என எதிபார்ப்பதாகவும் தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த வாரம் 2000 டன் உரம்

வந்துள்ளதாகவும், அதனை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தஞ்சை மாவட்டத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் 1.6 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், இதில் 85 சதவீதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.