×

நில அபகரிப்பு முயற்சி – ஆட்சியர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண் !

நில மோசடி புகாரில் பெண் ஒருவர், தனது இரண்டு மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சையை சேர்ந்தவர் ஜார்ஜ் டேவிட். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், சூசைராஜ் மற்றும் அவர் மனைவி ஆரோக்கிய செல்வி அவர்களிடம் இருந்த நிலத்தை 57 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதற்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலம் ஜார்ஜ் டேவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், சூசைராஜ் மற்றும் அவர் மனைவி
 

நில மோசடி புகாரில் பெண் ஒருவர், தனது இரண்டு மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையை சேர்ந்தவர் ஜார்ஜ் டேவிட். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் அவர், சூசைராஜ் மற்றும் அவர் மனைவி ஆரோக்கிய செல்வி அவர்களிடம் இருந்த நிலத்தை 57 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதற்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டு நிலம் ஜார்ஜ் டேவிட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், சூசைராஜ் மற்றும் அவர் மனைவி ஆரோக்கிய செல்வி இருவரும் நிலத்தை ஜார்ஜ் டேவிட்டுக்கு தெரியாமல் வேறு ஒருத்தருக்கு விற்க முயற்சி செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஜார்ஜ் டேவிட் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவகம் வந்த ஆரோக்கிய செல்வி, தன் இரு மகன்களுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். தங்கள் வீட்டை கந்துவட்டி கும்பல் தாக்கியதாகவும் குறிப்பிட்டார்.

தீக்குளிக்க முயன்ற ஆரோக்கிய செல்வியை காவல்துறையினர் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.