×

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒங்கிணைப்புக்குழு சார்பில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், திமுக, கங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், திமுக எம்.எல்.ஏ அன்பில்
 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று மூன்றாவது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒங்கிணைப்புக்குழு சார்பில் இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், திமுக, கங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்

தஞ்சையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூன்றாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு போலீசாரின் கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, ஏராளமான சமூக அமைப்பினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, சார் ஆட்சியர் அலுலகத்தில் இருந்து பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வேளாண் சட்டங்கள் மற்றும் 2020 மின்சார மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்

ஈரோட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகள் மூன்றாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.