×

மாநாட்டிற்கு இடம் தரக் கோரி, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் தஞ்சையில் விவசாயிகள் மாநாட்டிற்கு இடம் வழங்க மறுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை திலகர் திடலில் வரும் 29ஆம் தேதி அனைத்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உழவர்கள் பேரணி மற்றும் மாநாடு நடத்த, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கோரி மாவட்ட காவல்துறை மற்றும்
 

தஞ்சாவூர்

தஞ்சையில் விவசாயிகள் மாநாட்டிற்கு இடம் வழங்க மறுக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை திலகர் திடலில் வரும் 29ஆம் தேதி அனைத்து மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் உழவர்கள் பேரணி மற்றும் மாநாடு நடத்த, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கோரி மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தஞ்சை மாநகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநாட்டிற்கு இடம் வழங்க மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கும் வரை, தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதனால், தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.