×

’’நடிகர் சூர்யா இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறார்’’- தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் குற்றச்சாட்டு

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக கடந்த 7 ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் தலைமையில் பிரச்சார பயண குழுவினர் இன்று தஞ்சை வந்தனர். அப்போது மாநிலத் தலைவர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசியபோது, நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைபாட்டை அ.தி.மு.க. அரசு ஆதரிப்பது மாணவர்களிடையே கோபத்தை உண்டாக்கி இருப்பதாகவும், இறந்த மாணவர்களுக்கு தி.மு.க. நிதியுதவி அளித்து அரசியல் ஆக்குவதாகவும் தெரிவித்தார். மேலும், தர்மபுரியில் பட்டியலின
 

பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக கடந்த 7 ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் தலைமையில் பிரச்சார பயண குழுவினர் இன்று தஞ்சை வந்தனர்.

அப்போது மாநிலத் தலைவர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசியபோது, நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க.வின் நிலைபாட்டை அ.தி.மு.க. அரசு ஆதரிப்பது மாணவர்களிடையே கோபத்தை உண்டாக்கி இருப்பதாகவும், இறந்த மாணவர்களுக்கு தி.மு.க. நிதியுதவி அளித்து அரசியல் ஆக்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தர்மபுரியில் பட்டியலின மாணவி இறந்த போது உதவி செய்யவில்லை. நீட் தேர்வை வேண்டாம் என கூறும் தி.மு.க. 10, மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கூறுமா? என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம் தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது. நடிகர் சூர்யா இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறார். மத்திய அரசு கிசான் உதவி திட்டத்தில் நாடு முழுவதும் 9.6. கோடி பயனாளிகளை சேர்த்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தில் 110 கோடி முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க.வினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.

இப்பேட்டியின்போது, மாவட்ட பி.ஜே.பி.பொதுச் செயலர் ஜெய் சதீஷ் , மாவட்ட தலைவர் பண்ண வயல் இளங்கோ உடனிருந்தனர்.