×

தஞ்சாவூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக விசிக போராட்டம் – பரபரப்பு

தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைதுசெய்ய வலியுறுத்தி, பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தஞ்சையில் பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைதுசெய்ய வலியுறுத்தி, பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து, காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.