×

கொரோனா இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நுண் நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , கூட்டுறவு அமைப்புகள் அளித்துள்ள கடனை வசூல் செய்வதற்கு ஓராண்டு தடை செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு அளிக்க
 

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நுண் நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , கூட்டுறவு அமைப்புகள் அளித்துள்ள கடனை வசூல் செய்வதற்கு ஓராண்டு தடை செய்ய வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை அளிக்கவும் வலியுறுத்தினர். தேசிய கல்வி கொள்கை , சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை , வேளாண்மை சட்டங்களை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.