×

திருப்புவனத்தில் இளைஞர் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை

சிவகங்கை திருப்புவனத்தில் நேற்றிரவு இளைஞர் ஒருவர், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த நெல்முடிகரை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்ம் என்பவரது மகன் கணேசன்(36). திருப்புவனம் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்திவரும் கணேசன் நேற்றிரவு கடையை மூடிவிட்டு, பேருந்துநிறுத்தம் அருகே நடந்துசென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் கணேசனை அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த கணேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு
 

சிவகங்கை

திருப்புவனத்தில் நேற்றிரவு இளைஞர் ஒருவர், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த நெல்முடிகரை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்ம் என்பவரது மகன் கணேசன்(36). திருப்புவனம் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்திவரும் கணேசன் நேற்றிரவு கடையை மூடிவிட்டு, பேருந்துநிறுத்தம் அருகே நடந்துசென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல்

கணேசனை அரிவாளால் சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த கணேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடல் பிரேத

பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். கணேசன் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில், முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? என திருப்புவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்