×

சிறுமி கொலை வழக்கில் காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிவகங்கை சிவகங்கையில் 8 வயது சிறுமியை கல்லால் அடித்துக்கொலை செய்து, சுவரில் வைத்து புதைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த லெட்சுமணன் (45) – உஷா (42) தம்பதியினரின் 8 வயது மகள் அட்சயா, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம்தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அருகாமையில் இருந்தகட்டிடத்தில் இருந்து துா்நாற்றம் வீசியது.
 

சிவகங்கை

சிவகங்கையில் 8 வயது சிறுமியை கல்லால் அடித்துக்கொலை செய்து, சுவரில் வைத்து புதைத்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த லெட்சுமணன் (45) – உஷா (42) தம்பதியினரின் 8 வயது மகள் அட்சயா, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம்தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அருகாமையில் இருந்தகட்டிடத்தில் இருந்து துா்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி அட்சயா கொலை செய்யப்பட்டு, சுவரில் வைத்துபூசப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வீட்டின் காவலாளி அமல்ராஜ் என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் சிறுமியை கல்லால் அடித்துக் கொலைசெய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சிவகங்கை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட அமர்வு நீதிபதி ரபி, குற்றவாளி அமல்ராஜ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய்அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.