×

நகைகளுக்கு ஆசைப்பட்டு விதவைப்பெண் அடித்துக்கொலை! ஆனால், அது அத்தனையும் கவரிங் நகைகள்!

தங்க நகை என நினைத்து சேலத்தில் விதவைப் பெண்ணை கொலை செய்துவிட்டு, கவரிங் நகையை திருடி சென்ற வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். சேலம்பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது சொர்ணாம்பிகை தெரு. இந்தப் பகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்செல்வி (வயது 49)வசித்து வந்தார்.இவரது கணவர் ராஜ ராஜன் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். மலர் செல்விக்கு மூன்று மகள்கள் உள்ளனர் . மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து
 

தங்க நகை என நினைத்து சேலத்தில் விதவைப் பெண்ணை கொலை செய்துவிட்டு, கவரிங் நகையை திருடி சென்ற வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சேலம்பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது சொர்ணாம்பிகை தெரு. இந்தப் பகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்செல்வி (வயது 49)வசித்து வந்தார்.
இவரது கணவர் ராஜ ராஜன் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

மலர் செல்விக்கு மூன்று மகள்கள் உள்ளனர் . மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். வெங்கடேசன் என்ற மகனுடன் மலர்செல்வி வசித்து வந்தார்.

மலர் செல்வி, சோப்பு பவுடர்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடு வீடாக விற்பனை செய்யும் தொழில் செய்துவந்தார். மகன் வெங்கடேசன் சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு வெங்கடேசன் வீட்டிற்கு வந்தபோது அவரது தாயார் மலர்செல்வி வீட்டில் இல்லை. இதையடுத்து அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தார் .
எங்கும் மலர்செல்வி இல்லை . இதனால் மீண்டும் வீட்டிற்கு வந்து சமையல் கூடத்தில் பார்த்தார். அங்கு அவரது தாயார் மலர்செல்வி தலையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

உடனே இது குறித்து அவர் சேலம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலர்செல்வி கொலை செய்யப்பட்டதை அறிந்து, தஞ்சாவூரில் இருந்து திரளான உறவினர்கள் சேலம் நகர காவல் நிலையம் வந்து கதறி அழுதனர்.

இந்த கொலையில் துப்பு துலங்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் இரண்டு தனிப்படைகளை அமைத்து உள்ளார். இதில் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் தீவிர விசாரணை நடக்கிறது.

இவர்கள் வாலிபர் ஒருவரைப் பிடித்து தற்போது விசாரணை செய்து வருகிறார்கள். இந்த வாலிபர் மலர்செல்வியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி மலர்செல்வி அணிந்திருந்த தோடு மற்றும் நகையை பறித்த போது தகராறு ஏற்பட்டதில் மலர்செல்வி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதில் மலர்செல்வி படுகாயம் அடைந்து இறந்து விட்டார். பின்னர் அந்த வாலிபர் தோடு மற்றும் நகைகளை எடுத்து தப்பி சென்றுள்ளார். இந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தற்போது தெரிய வந்திருக்கிறது.

இந்த வாலிபரிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.