×

சேலம்- ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மாற்றுத்திறனாளியான இவர் பணம் கொடுக்கல் வாங்கல்தொடர்பாக தன்னை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, தனது தாயாருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ரமேஷ், திடீரென தான்
 

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மாற்றுத்திறனாளியான இவர் பணம் கொடுக்கல் வாங்கல்
தொடர்பாக தன்னை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, தனது தாயாருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ரமேஷ், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து இருவர் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதேபோன்று சேலம் பனமரத்துப்பட்டியை

சேர்ந்த விவசாயி பழனி என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை அபகரித்துக்கொண்டு, கொலை மிரட்டல் விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனைவி மற்றும் பேரன், பேத்தியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, திடீரென அவர்கள் மீது மண்ணெண்ணை ஊற்றி குடும்பத்தோடு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து இரு குடும்பத்தினரையும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.