×

ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதி படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!

ஏற்காடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த தம்பதி இரவு நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருக்கும் கராரா எஸ்டேட்டில் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த கோண்டாபகன் (41) – சுதிகேன்ஸ் (36) ஆகிய தம்பதி அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். இவர்களது உறவினரான ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்காடு எஸ்டேட்டுக்கு வந்திருக்கிறார். இவர்கள் 3 பெரும் இணைந்து
 

ஏற்காடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த தம்பதி இரவு நேரத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருக்கும் கராரா எஸ்டேட்டில் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த கோண்டாபகன் (41) – சுதிகேன்ஸ் (36) ஆகிய தம்பதி அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தனர். இவர்களது உறவினரான ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்காடு எஸ்டேட்டுக்கு வந்திருக்கிறார். இவர்கள் 3 பெரும் இணைந்து ஒன்றாக மது அருந்தியதாகவும் சத்தமாக இந்தி பாடல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

இதனை அறிந்த எஸ்டேட் மேலாளர், அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் யாரும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து பார்த்த போது அந்த தம்பதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்டேட் மேலாளர், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தம்பதியின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தம்பதியுடன் இருந்த ஹைரா போத்ரே என்ற நபர் காணாமல் போனதால், அவர் இந்த தம்பதியை கொலை செய்திருக்கலாம் என்றும் வெளியே சத்தம் கேட்காமல் இருக்க சத்தமாக இந்தி பாட்டை வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து அவரை பிடிக்க வலை வீசிய போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். எஸ்டேட்டில் வசித்து வந்த தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.